July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் திருட்டு: ஒருவர் கைது!

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் பொருத்தப்பட்டுள்ள குளிரூட்டி இயந்திரங்களிலிருந்த செப்புக் கம்பிகள் திருடப்பட்டமை தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு, மருதானை – டாலி வீதியில் அமைந்துள்ள கட்சியின் தலைமையக கட்டடத்திற்குள் திருடன் நுழைந்து திருடும் காட்சிகள் சீசீரிவியில் பதிவாகியுள்ளன.

இது தொடர்பில் கொழும்பு 10 பகுதியை சேர்ந்த 23 வயதான நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள நபர் போதைப் பொருளுக்கு அடிமையானவர் என்று தெரிவிக்கப்படுகின்றது.