பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அதிபர், ஆசிரியர்கள் இரத்தினபுரி நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டு பிரச்சனைக்கு தீர்வு காணுதல், கொவிட் காலத்தில் இணையம் ஊடாக கற்பித்தலில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு தேவையான உபகரணங்களை வழங்குதல், கொத்தலாவல பல்கலைக்கழக சட்டமூலத்தை நீக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதிபர், ஆசிரியர்களின் கூட்டுத் தொழிற்சங்களின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதுடன், இதில் பெருந்திரளான ஆசிரியர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இதேவேளை அதிபர், ஆசிரியர்களின் தொழிற்சங்கப் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.