அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் அவர்களின் தொகுதிகளுக்கு சென்று மக்களை தெளிவுப்படுத்துவதற்கு சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
எரிபொருள் விலையை அதிகரித்து, மக்களை துன்பத்திற்குள் தள்ளியுள்ள நிலையில் நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்த்த எம்பிக்கள் தொடர்பாக மக்களை தெளிவுப்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
இதேவேளை பஸில் ராஜபக்ஷவினால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் மூலமே இந்த பிரேரணை தோற்கடிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் அரசாங்கத்திற்குள் உள்ளக பிரச்சனைகள் இருந்தாலும், அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் எதிர்க்கட்சிகளின் முயற்சிகளுக்கு இடமளிக்க மாட்டோம் என்று பொதுஜன பெரமுன செயலாளர் சாகர காரியவசம் கூறியுள்ளார்.