இலங்கையில் அமுலில் உள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு மறு அறிவித்தல் வரையில் தொடரும் என்று இராணுவத் தளபதி ஷவேந்திர சில்லா தெரிவித்துள்ளார்.
இதேவேளை மாகாணங்களுக்கு இடையே போக்குவரத்துகளை இயல்பு நிலைக்கு கொண்டுவருது தொடர்பாக இதுவரையில் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் இராணுவத் தளபதி கூறியுள்ளார்.
நாடு முழுவதும் மே 21 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடு ஜுன் 21 ஆம் திகதியுடன் தளர்த்தப்பட்ட போதும் மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடையை தொடர்வதற்கு தீர்மானிக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த 14 ஆம் திகதி முதல் மாகாணங்களுக்கு இடையே பொதுப் போக்குவரத்துச் சேவைகளை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்ட நிலையில், பின்னர் அந்தத் தீர்மானம் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டது.
நாட்டில் கொவிட் தொற்று அச்சுறுத்தல் தொடர்ந்தும் இருப்பதால் மாகாணங்களுக்கு இடையே பொதுப் போக்குவரத்து சேவைகளை முன்னெடுக்க கொவிட் தடுப்புச் செயலணி அனுமதி வழங்கவில்லை.
இதேவேளை தற்போது அமுலில் உள்ள மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாட்டை தொடர்ந்தும் அமுலில் வைத்திருப்பதற்கே தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.