இஸ்லாமியர்கள் இன்றைய தினம் புனித ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் இலங்கை முழுவதும் பள்ளிவாசல்களில் பெருநாள் தொழுகைகள் இடம்பெற்றன.
நாட்டில் கொவிட் தொற்று அச்சுறுத்தல் காணப்படுவதால் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தொழுகைகளை நடத்துமாறு சுகாதார அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதற்கமைய சமூக இடைவெளிகளை பேணி, முகக்கவசங்களை அணிந்தவாறு பள்ளிவாசல்களில் தொழுகைகள் இடம்பெற்றன.
இதேவேளை பல பள்ளிவாசல்களில் இந்தத் தொழுகையின் போது, நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்கள் பாதுகாக்கப்பட வேண்டுமென விசேட துவா பிரார்த்தனைகளும் இடம்பெற்றன.
இதன்படி மன்னார் மூர்வீதி ஜும்மா பள்ளிவாசலில் தொழுகையுடன் விசேட துவா பிரார்த்தனை நடத்தப்பட்டது.