January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரிஷாத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வருவோமா?; விமல் வீரவன்ச கேள்வி

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் வீட்டில் மரணமடைந்த சிறுமி குறித்து எதிர்க்கட்சி எதனையும் கூறவில்லை.சிறுவர் துஸ்பிரயோகம் என்ற குற்றச்சாட்டு முன்வைத்து ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவருவோமா என அமைச்சர் விமல் வீரவன்ச எதிர்க்கட்சி உறுப்பினர்களிடத்தில் பாராளுமன்றத்தில் வைத்து கேள்வி எழுப்பினார்.

மலையகத்தை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் ரிஷாத் பதியுதீன் இல்லத்தில் உயிரிழந்துள்ளார் அவர் தொடர்ச்சியாக பாலியல் ரீதியில் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக மரண அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இது பொலிஸாருக்கு தெரிந்தவுடன், ரிஷாத் பதியுதீன் சுகவீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு விட்டார்.

இது குறித்து எதிர்க்கட்சியினர் என்ன கூறுகின்றீர்கள்.ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவருவோமா? சிறுவர் துஸ்பிரயோகம் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவருவோமா?ஏன் அந்த சிறுமியை தீயிட்டு கொல்லும் நிலைக்கு கொண்டு சென்றனர் என்றும் அவர் கேள்வியெழுப்பினார்..