January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ்.இணுவில் பகுதியில் வாள்வெட்டு; கணவன்,மனைவி படுகாயம்

யாழ்ப்பாணம்,இணுவில் காரைக்கால் பகுதியில் வாள்வெட்டு வன்முறைக் கும்பல் நடத்திய தாக்குதலில் குடும்பத் தலைவரும் அவரது மனைவியும் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மகனைத் தேடி வந்த குறித்த கும்பல்,அவர் வீட்டில் இல்லாத நிலையில் தந்தை மற்றும் தாயை தாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளது என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் செவ்வாய்க்கிழமை (20) இரவு இடம்பெற்றது.

சம்பவத்தில் ஜெயக்குமார் மற்றும் அவரது மனைவி ஜெயக்குமாரி ஆகிய இருவரும் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.