January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

13 வயது சிறுமி துஷ்பிரயோகம்; பௌத்த பிக்கு உள்ளிட்ட நால்வர் கைது!

13 வயது சிறுமிக்கு வரம் தருவதாக கூறி கடத்தி சென்று பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய பௌத்த பிக்கு உள்ளிட்ட நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராஜகிரிய பகுதியைச் சேர்ந்த விஹாரை ஒன்றின் பௌத்த பிக்கு ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, கைது செய்யப்பட்ட நால்வரும் அத்தனகல்ல நீதிமன்றில் ஆஜர்படுத்திய வேளை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

குறித்த சிறுமி கம்பஹா – வெயாங்கொட பகுதியை சேர்ந்தவர் என விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.