October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி!

அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை 91 மேலதிக வாக்குகளால் தோல்வியடைந்தது.

எரிபொருள் விலையேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு வலுச் சக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் நேற்றும் இன்றும் நடைபெற்றது.

விவாதம் முடிவடைந்த பின்னர் இன்று மாலை 5.30 மணியளவில் அதன் மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதன்போது பிரேரணைக்கு ஆதரவாக 61 வாக்குகளும் எதிராக 152 வாக்குகளும் கிடைத்தன.

பிரேரணைக்கு ஆதரவாக ஐக்கிய மக்கள் சக்தி , ஜே.வி.பி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வாக்களித்ததுடன், பிரேரணைக்கு எதிராக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளும் வாக்களித்தன.