January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் இணையத்தின் ஊடாக விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதிக்க திட்டம்!

இலங்கையில் இணையத்தின் ஊடாக விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன இன்று (20) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

உலகின் பல நாடுகளை போன்று (இ-கொமர்ஸ்) இலத்திரனியல் வணிக நடவடிக்கையை நமது நாட்டிலும் முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

நாடாளுமன்றத்தில், இன்று மொஹமட் முஸம்மில் எம்.பி எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.