January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மாலைத்தீவு ஜனாதிபதி இப்ராஹீம் மொஹமட் இலங்கைக்கு விஜயம்

உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு மாலைத்தீவு ஜனாதிபதி இப்ராஹீம் மொஹமட் இலங்கை வந்துள்ளார்.

இன்று முற்பகல் 11.30 மணியளவில் ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் மூலம் அவர் கட்டுநாயக்க விமானத்தை வந்தடைந்ததாக விமான நிலைய தகவல்கள தெரிவிக்கின்றன.

அவருடன் 15 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவொன்றும் இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று நாட்களுக்கு இலங்கையில் தங்கியிருக்கும் மாலைதீவு ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர், கொழும்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ, வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன உள்ளிட்ட அரச உயர்மட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளனர்.