இலங்கையில் சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுக்கொண்டவர்களின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
கொழும்பு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் இதுதொடர்பான தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டில் சினோபார்ம் பெற்றுக்கொண்ட 95 வீதமானோரின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வேகமாகப் பரவி வரும் டெல்டா வைரஸ் தொற்றுக்கு எதிராகவும் சினோபார்ம் தடுப்பூசி வினைத்திறனுடன் செயற்படுவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களான நீலிகா மாலவிகே, சந்திம ஜீவந்தர உள்ளிட்ட குழுவினர் மேற்கொண்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆய்வுக்கு அமைய, சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுக்கொண்ட 20- 39 வயதுடையவர்களிடையே நோயெதிர்ப்பு சக்தி 98.9 வீதத்தாலும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களிடையே 93.3 வீதத்தாலும் அதிகரித்துள்ளதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுக்கொண்ட 282 பேரிடையே மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.