இலங்கைக்கான மியன்மார் தூதுவர் யு ஹன் து மற்றும் வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோருக்கு இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
வெளியுறவு அமைச்சில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது, நீண்டகால இலங்கை- மியன்மார் சகோதரத்துவ இருதரப்பு உறவுகள் குறித்து வெளியுறவு அமைச்சர் வலியுறுத்தியுள்ளதோடு, பல நூற்றாண்டுகளாக தொடரும் பௌத்த தொடர்புகளையும் பகிர்ந்துகொண்டுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் உறவுகள் பல ஆண்டுகளாக பல்வேறு வழிமுறைகள் மூலம் பலனளிப்பதை இந்த சந்திப்பில் ஒப்புக்கொண்டுள்ளதுடன், இலங்கை- மியான்மார் நாடாளுமன்ற நட்புறவுக் குழுவிற்கு புத்துயிர் அளிப்பதன் முக்கியத்துவமும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
கொவிட் தொற்றுக்கு பின்னரான பொருளாதார ஒத்துழைப்புக்கான சாத்தியமான பகுதிகளில் இரு நாடுகளும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் எனக் குறிப்பிட்ட அமைச்சர், தேங்காய் தொழில்துறை, விவசாயம், பௌத்த சுற்றுலா, ரப்பர் மற்றும் கப்பல் துறை போன்ற பகுதிகளை சுட்டிக்காட்டியுள்ளார்.