இலங்கையில் பெட்ரோலிய மற்றும் வாயுக்கள் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தித் துறை அபிவிருத்திக்குத் தேவையான சட்ட ஏற்பாடுகளை உள்ளடக்கிய தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்பிக்க அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
2003 ஆம் ஆண்டு 26 ஆம் இலக்க பெட்ரோலிய வளங்கள் சட்டத்தை நீக்கி புதிய சட்டத்தை தயாரிப்பதற்காக 2021 ஜனவரி 25 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது.
குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் எரிசக்தி அமைச்சர் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.