இலங்கையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி களுத்துறை மாவட்டத்தின் வஸ்கடுவ கிராம சேவகர் பிரிவு மற்றும் கண்டி மாவட்டத்தின் கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாகரதெனிய ஆகிய பகுதிகள் இன்று காலை முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதேவேளை தனிமைப்படுத்தப்பட்டுள்ள மற்றைய பிரதேசங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாளை முதல் நீண்ட விடுமுறை நாட்கள் என்பதனால் மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டை கடுமையாக நடைமுறைப்படுத்த பொலிஸார் நடவடிக்கையெடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.