July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு’

வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களிக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.