November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

18 லீற்றர் சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலைக்கு அமைச்சரவை அனுமதி!

“லிட்ரோ கேஸ் லங்கா” நிறுவனத்தினால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட “லிட்ரோ பிரீமியம் ஹைப்ரிட்” என்ற 18 லீட்டர் நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் விலையை 1,150 ரூபாவாக குறைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

ஏற்கனவே குறித்த “லிட்ரோ பிரீமியம் ஹைப்ரிட்” என்ற புதிய எரிவாயு சிலிண்டர் சந்தையில் 1,395 ரூபாவுக்கு சந்தைப்படுத்தப்பட்டதையடுத்து சர்ச்சை ஏற்பட்டது.

இந்நிலையில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட 18 லீற்றர் சமையல் எரிவாயு சிலிண்டரை 1,150 ரூபா விலையில் விற்பனை செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதேவேளை, சந்தையில் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் 25 லீட்டர் எரிவாயுவைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.