
உலகிலேயே அதிக பெறுமதியுடைய மற்றும் விலை மதிப்பிட முடியாதவை என கூறப்படும் மாணிக்கக் கற்கள் மூன்று இலங்கை வங்கியின் அதிஉயர் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள தேசிய இரத்தினக் கற்கள் மற்றும் தங்க ஆபரணங்கள் அதிகார சபை கட்டடம் தாழிறங்கும் அபாயத்தில் இருப்பதால், அந்த அதிகார சபையின் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் பாதுகாப்புக் கருதி குறித்த கற்களை பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி தேசிய இரத்தினக் கற்கள் மற்றும் தங்க ஆபரணங்கள் அதிகார சபையில் இருந்து விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் இன்றைய தினம் எடுத்துச் செல்லப்பட்ட குறித்த மாணிக்கக் கற்கள் இலங்கை வங்கித் தலைமையகத்தில் உள்ள பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
விடயத்திற்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தவின் ஆலோசனைக்கமைய அந்த அதிகார சபையின் புதிய கட்டடம் நாரஹேன்பிட்டியில் அமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.