ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவை கைது செய்ய எந்த திட்டமும் இல்லை என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
ஹரின் பெர்னாண்டோ கூறுவது போல் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி பற்றிய தகவல்கள் அவருக்கு தெரிந்தால் அது குறித்த தகவல்களை சி.ஐ.டி.க்கு வழங்க வேண்டியது அவரின் கடமை என அமைச்சர் சரத் வீரசேகர குறிப்பிட்டார்.
” எனினும் அவர் அவ்வாறு செய்ய விரும்பவில்லை என்றால், எங்களுக்கு அது தொடர்பில் எந்த பிரச்சினையும் இல்லை, ”என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் கூறினார்.
ரிஷாட் பதியுதீன்,ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பல சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்பதால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்களை அச்சுறுத்துவது மற்றும் தடுத்து வைப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று (19) பாராளுமன்றத்தில் உரையாற்றினார்.
இதன் போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஹரின் பெர்னாண்டோ எம்.பி. பாராளுமன்றத்தில் மேற்கொண்ட கருத்துக்களை அடிப்படையாக வைத்து, அவரையும் கைது செய்ய முயற்சிகள் இடம்பெறுவதாக குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும் போதே பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இதனை தெரிவித்தார்.