ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 75 இற்கும் மேற்பட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு எதிராக, ஒழுக்காற்று நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
கட்சியின் கூட்டங்களில் பங்கேற்காதமை, அமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றாமை, கட்சியின் இணக்கப்பாடுகளை மீறி செயற்படுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில், அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகள் இடம்பெறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேநேரம், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாத்தளை மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் 16 பேர் நேற்று ஒழுக்காற்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த பொதுத் தேர்தலின் போது, மாத்தளை மாவட்ட வேட்பாளரான முன்னாள் அமைச்சர் லக்ஸ்மன் வசந்த பெரேராவுக்கு ஆதரவளிக்காமல் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளருக்கு ஆதரவளித்தமை தொடர்பில் அவர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.