எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை வாக்கெடுப்பில் மக்கள் உண்மையான தேச பக்தர்களையும் துரோகிகளையும் பார்ப்பார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் தலைமையில் இன்று (19) காலை பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போதே அவர் இதனை கூறினார்.
“முழு நாட்டையும் இன்னல்களுக்கு உள்ளாக்கிய இந்த அரசாங்கத்தை மக்கள் பலத்தால் வீட்டிற்கு அனுப்புவதற்காக நாங்கள் இந்த பயணத்தை ஆரம்பித்துள்ளோம்.
எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் வெற்றி கண்டதும் அடுத்ததாக அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்ப மிக முக்கியமான நடவடிக்கைகளை எடுப்போம்” என்றார்.