யாழ்ப்பாணம் மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தலைமையகத்தின் 26 ஆவது கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் டி.ஜே. கொடிதுவக்கு பதவியேற்றார்.
அவர் இன்று சுப வேளையில் சம்பிரதாயூர்வமாக சமய சடங்குகளுடன் கையொப்பமிட்டு, கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
இலங்கை காலாட்படையினர் இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கி, புதிய கட்டளைத் தளபதியை வரவேற்றனர்.
புதிய கட்டளைத் தளபதி யாழ். மாவட்ட பாதுகாப்பு படைகளின் தலைமையகத்தின் முன் பகுதியில் மரக்கன்று ஒன்றையும் நாட்டினார்.
இந்த நிகழ்வில் சர்வ மதத் தலைவர்கள், 51, 52 மற்றும் 55 ஆவது காலாட்படை
தலைமையகங்களின் தளபதிகள், சேனைத் தளபதிகள், இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும்
இராணுவ வீரர்கள் கலந்து கொண்டிருந்தனர்.