January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மலையக சிறுமியின் மரணம் தொடர்பில் பல்வேறு தரப்பினரிடமும் பொலிஸார் வாக்குமூலம் பெற்றனர்

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த சிறுமியின் மரணம் தொடர்பில் பொலிஸார் பல்வேறு தரப்பினரிடமும் வாக்குமூலங்களைப் பெற்றுக்கொண்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

சிறுமியின் மரணம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பொலிஸார் விசாரணைகளை துரிதப்படுத்தியுள்ளனர்.

சிறுமியின் தாய், ரிஷாட் எம்.பியின் மனைவியின் பெற்றோர் ஆகியோரிடம் வாக்குமூலங்களைப் பெற்றுக்கொண்டதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சிறுமியைக் கொண்டுவந்தவரிடமும் வாக்குமூலம் பெற்றுக்கொள்ள உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறுமியின் மரணம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில், சிறுமி பாலியல் தீண்டலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை தெரியவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொரளை பொலிஸாருடன் ஒன்றிணைந்து கொழும்பு சிறுவர் மற்றும் பெண்கள் விவகார பொலிஸ் பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.