
இலங்கையில் புதன் கிழமை முதல் நாடளாவிய ரீதியில் சிறப்பு தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாக சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
நீண்ட வார இறுதி விடுமுறையை முன்னிட்டு இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக மாகாண எல்லைகளில் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, நாட்டில் இதுவரை தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 50,994 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா தெரிவித்தார்.
மாகாணங்களுக்கு இடையே பயணிப்பதற்கு தொடர்ந்தும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், நெருங்கிய உறவினர்கள் மற்றும் மருத்துவ தேவைகளுக்காக மட்டும் மாகாணங்களுக்கு இடையே பயணிப்பதற்கு அனுமதிக்கப்படும் என்றார்.