இலங்கை அதிபர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்க உறுப்பினர்கள் கல்வி அமைச்சுக்கு முன்னால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.
அதிபர் மற்றும் ஆசிரியர்களின் சம்பளம் உட்பட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து, இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதிபர், ஆசிரியர் சம்பள பிரச்சினைகளுக்கு எதிரான தேசிய ஒன்றியம் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.
ஆர்ப்பாட்டம் காரணமாக 174 ஆம் இலக்க பஸ் பயணிக்கும் வீதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.