
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 74 ஆவது நினைவு தின நிகழ்வு வவுனியாவில் இன்று நடைபெற்றது.
வவுனியா நகரசபையினால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது கண்டி வீதியில் அமைந்துள்ள விபுலானந்தரின் உருவச் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இதனையடுத்து, விபுலானந்தர் தொடர்பான நினைவு பேருரையினை வவுனியா தமிழ்சங்கத்தின் தலைவர் தமிழருவி சிவகுமாரன் ஆற்றியிருந்தார்.
நிகழ்வில் நகரசபை செயலாளர், நகரசபை உறுப்பினர்கள், பிரதேசசபை உறுப்பினர்கள் மற்றும் பொதுஅமைப்புகளைரசேர்ந்தவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
அதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் விபுலானந்தரின் நினைவு தின நிகழ்வுகள் அனுஷ்க்கப்பட்டது.
அதற்கமைய கல்லடி – உப்போடை மணிமண்டப வளாகத்தில் அமைந்துள்ள சுவாமி விபுலானந்தரின் சமாதியில் சிவானந்தா வித்தியாலய அதிபர் ந.சந்திரகுமாரின் ஒழுங்கமைப்பில் அனுஷ்டிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் மேலாளர் சுவாமி தட்சயானந்தா ஜீ மஹராச், சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச்சபை தலைவர் க.பாஸ்கரன், செயலாளர் ச.ஜெயராஜா மற்றும் சிவானந்தா வித்தியாலய ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு திருநீற்றுப் பூங்காவில் அமைந்துள்ள சுவாமியின் திருவுருவச் சிலைக்கு மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் மன்றத்தின் தலைவர் மு.பவளகாந்தனின் தலைமையில் இடம்பெற்றது.
அத்தோடு கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவ வளாகத்திலும் விபுலானந்தரின் நினைவு தின நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.