இலங்கையில் பொதுமக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை முன்வைத்து எதிர்க்கட்சி இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் தலைமையில் இன்று காலை பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
“எரிபொருள் விலையை உயர்த்திய கமன்பிலாவை வெளியேற்றுவோம். நிவாரணத்தை குறைத்து நாட்டை அழிக்கும் ஒடுக்குமுறை அரசாங்கத்தை விரட்டுவோம்” எனும் கருப்பொருளில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களும் பொதுமக்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
அரசாங்கம் தன்னிச்சையாக அதிகரித்த எரிபொருள் விலையை மீண்டும் குறைத்து, பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.