
கொழும்புத் துறைமுக நகரப் பகுதிக்குள் அனுமதியின்றி நுழைய முற்பட்ட சீனப் பிரஜை உள்ளிட்ட 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சீனப் பிரஜை துறைமுக நகரத்துக்கும், கொழும்புத் துறைமுகத்துக்கும் இடையில் அதிவேக நெடுஞ்சாலை அமைப்பதற்கு மனிதவளத்தை வழங்கும் நிறுவனத்தில் பணியாற்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்த நபர் துறைமுகத்துக்குள் பிரவேசிக்கும்போது சமர்ப்பிக்கப்பட வேண்டிய அனுமதிப்பத்திரம் இன்றி, மற்றைய நான்கு நபர்களையும் துறைமுக நகரப் பகுதிக்குள் அழைத்துச் செல்ல முயற்சித்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள ஐந்து பேரும் கரையோரப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது சீனப் பிரஜையுடன் கைது செய்யப்பட்ட மற்றைய நால்வரும் பொத்தவில் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகின்றது.
சந்தேக நபர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.