
அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் மேலும் ஒரு தொகை பைசர் தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்தன.
கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானம் மூலம் இந்தத் தடுப்பூசிகள் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறாக 70,200 டோஸ் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதுடன், இவை பாதுகாப்பாக அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் களஞ்சியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
இதேவேளை கடந்த 12 ஆம் திகதி 26,000 டோஸ் பைசர் தடுப்பூசிகள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதுடன் அவற்றை மன்னார் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.