தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் கொவிட்-19 தடுப்பூசி ஏற்றல் தொடர்பான நிபுணர் குழுவின் மூன்று உறுப்பினர்கள் இராஜினாமா செய்துள்ளனர்.
தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை, சீனாவில் தயாரிக்கப்பட்ட சினோவெக்ஸ் தடுப்பூசியை இலங்கையில் பயன்படுத்துவதற்கு அனுமதியளிக்கப்பட்ட பின்னர் இவர்கள் இராஜினாமா செய்துள்ளனர்.
8 உறுப்பினர்களைக் கொண்ட இந்தக் குழுவிலிருந்து,வைத்தியர் ரஜிவ டி சில்வா,வைத்தியர் காந்தி நாணயக்கார மற்றும் பேராசிரியர் சன்ன ரணசிங்க ஆகியோரே இவ்வாறு இராஜினாமா செய்துள்ளனர்.
சீன தயாரிப்பான சினோவெக்ஸ் தடுப்பூசியை பயன்படுத்த அனுமதி வழங்குவதற்கு தாம் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை அந்த தடுப்பூசியைப் பயன்படுத்த அனுமதியளித்துள்ளமையே தாம் இராஜினாமா செய்வதற்கு காரணம் என இவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.