January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்தை மீள பெறுமாறு சஜித் பிரேமதாச ஜனாதிபதியிடம் கோரிக்கை

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக உத்தேச சட்டமூலம் நாட்டின் இலவச கல்வி கட்டமைப்புக்கும் அதன் இருப்புக்கும் பேரழிவை ஏற்படுத்தும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

எனவே, உத்தேச கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்தை உடனடியாக மீள பெறுமாறு ஜனாதிபதியிடம் கோருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் தான்தோன்றித்தனமாக பல்கலைக்கழக சட்டத்தை திருத்தி அல்லது உத்தேச கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு முயற்சித்தால் மகா சங்கத்தினர், பல்கலைக்கழக சமூகம், சிவில் அமைப்புகள், ஏனைய அரசியல் கட்சிகள் மற்றும் மக்களை ஒன்றுதிரட்டி அந்த முயற்சியை தோற்கடிப்பதற்கு திடசங்கற்பத்துடன் ஐக்கிய மக்கள் சக்தி செயற்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.