January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பத்தனை டெவோன் நீர்வீழ்ச்சியில் விழுந்த யுவதியை காணவில்லை!

நுவரெலியா மாவட்டத்தின் பத்தனை டெவோன் நீர்வீழ்ச்சியில் இன்று மாலை யுவதி ஒருவர் தவறி விழுந்து காணமல் போயுள்ளார்.

நீர் வீழ்ச்சியை பார்வையிட சென்ற தலவாக்கலை லிந்துலை லென்தோமஸ் தோட்ட பகுதியைச் சேர்ந்த 19 வயதான யுவதியே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நீர்வீழ்ச்சியை பார்வையிடுவதற்காக அதன் உச்சிப் பகுதிக்கு யுவதிகள் நான்கு பேர் சென்றுள்ள நிலையில், அதன்போது குறித்த யுவதி கால் வழுக்கி நீர் வீழ்ச்சியில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பபடுகின்றது.

97 மீட்டர் பள்ளத்திலேயே அந்த யுவதி விழுந்துள்ளதாக கூறப்படும் நிலையில் அவரைத் தேடி இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் விமான படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை சம்பவத்தின் போது அந்த இடத்தில் இருந்த ஏனைய 3 யுவதிகளும் திம்புளை – பத்தனை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் திம்புளை – பத்தனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.