January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் ‘டெல்டா’ வைரஸ் தொற்று தீவிரமடையலாம் ; சன்ன ஜயசுமன

இலங்கையில் “டெல்டா” வைரஸ் தொற்று தீவிரமடையும் ஆபத்து உள்ளது என்று மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

உலகின் பல நாடுகளில் கொவிட் வைரஸின் பல வகையான மாறுபாடுகள் பரவி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

“டெல்டா” வைரஸ் வகை உலக நாடுகளில் தற்போது ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், இலங்கையால் அதிலிருந்து தப்பிக்க முடியாது என்று பேராசிரியர் சன்ன ஜயசுமன கூறினார்.

எனினும் தடுப்பூசி பெற்றவர்கள் “டெல்டா” மாறுபாட்டினால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன குறிப்பிட்டார்.

இலங்கையில் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் “அஸ்ட்ரா செனெகா”, “பைசர்” மற்றும் “சினோபார்ம்” தடுப்பூசிகள் டெல்டா வகைகளுக்கு நல்ல பாதுகாப்பு அளிப்பதாக பேராசிரியர் தெரிவித்தார்.

இதனிடையே தென் அமெரிக்காவில் பெரு மாநிலத்தை மையமாக கொண்ட பல நாடுகளில் “லாம்ப்டா” வகை வைரஸ் பரவி வருவதாகவும், அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தை மையமாக கொண்ட பல நாடுகளில் “எப்சிலின்” வைரஸ் பரவி வருவதாகவும் பேராசிரியர் சன்ன ஜயசுமன குறிப்பிட்டார்.