January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மலையக சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி ஹட்டனில் ஆர்ப்பாட்டம்

ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த நிலையில் உயிரிழந்த மலையக சிறுமியின் மரணம் தொடர்பில் உண்மை கண்டறியப்பட வேண்டும் என வலியுறுத்தி ஹட்டனில் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

மலையக மக்கள் முன்னணியின் மகளிர் அமைப்பின் ஏற்பாட்டில் முன்னணியின் தலைவர் வீ. இராதா கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சமூக செயற்பாட்டாளர்களும் பங்கேற்றுள்ளனர்.

சிறுமியின் மரணத்துக்கான காரணம் கண்டறியப்பட வேண்டும், தரகர் முதல் சிறுமியை வேலைக்கு அமர்த்தியவர்கள் வரை இதனுடன் தொடர்புபட்ட அனைவருக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

அத்துடன், வீட்டுப் பணியாளர்களாக செல்லும் பெண்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் கண்டித்தும், பெண்களுக்கான உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

This slideshow requires JavaScript.