January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் சுதந்திரக் கட்சி எடுத்துள்ள தீர்மானம்!

அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்ப்பதற்கு அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளின் ஒன்றான ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.

எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பான தீர்மானம் கம்மன்பிலவினால் தனித்து எடுக்கப்பட்டது அல்லவெனவும், அது முழு அமைச்சரவையும் இணைந்து எடுத்த தீர்மானம் என்பதனால் கம்மன்பில மீது மாத்திரம் அதன் பொறுப்பை சுமத்த முடியாது என்று சுதந்திரக் கட்சியின் அமைச்சரான மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதனால் எதிர்க்கட்சிக் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பின் போது சுதந்திரக் கட்சி கம்மன்பில மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்த நடவடிக்கையெடுக்கும் என்று மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இன்று மாலை ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற ஆளுங்கட்சிக் குழுக் கூட்டத்தில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கலந்துகொள்ளவுள்ளதுடன், அதன்போது நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான தமது தீர்மானத்தை அறிவிக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது.