February 22, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மன்னார் மறை மாவட்டத்தின் மறைசாட்சிகள் நினைவு விழா

மன்னார் மறை மாவட்டத்தின் மறைசாட்சிகள் நினைவு விழா நேற்று நடைபெற்றது.

கடந்த வெள்ளிக்கிழமை லுமன் லோகு ஆயரினால் கொடியேற்றத்துடன் விழா ஆரம்பமானது.

இதனை தொடர்ந்து நேற்று காலை 7.15 மணிக்கு அருட்பணி சூ.அன்ரனி பொன்சியன் ஆயர் தலைமையில் தோட்டவெளி பங்குத்தந்தை அருட்பணி டே.அலெக்சாண்டர் சில்வா (பெனோ) , செட்டிகுளம் பங்குத்தந்தை அருட்பணி இம்மானுவேல் செபமாலை ஆகியோர் இணைந்து நினைவு விழா திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர்.

மன்னார் சமூக நல அமைப்பின் தலைவர் சந்தியோகு (அமிர்தம்) தலைமையிலான குழு இந்த விழாவை ஏற்பாடு செய்திருந்தது.

திருவிழாவின் நிறைவில் மன்னார் மறைசாட்சிகளின் புனித நிலைக்கு உயர்த்துவதற்கான உருக்கமான செபவேண்டுதலும் வழமைபோல் இல்லாமல் குறைவான பக்தர்கள் கலந்துகொண்டு இறையாசி பெற்றுச்சென்றனர்.

This slideshow requires JavaScript.

கொரோனா சூழலை கருத்தில் கொண்டு நாட்டில் நடைமுறையில் இருக்கின்ற சுகாதார விதி முறைகளுக்கு உட்பட்டு இந்த விழா நடத்தப்பட்டது.