February 24, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் விடுத்துள்ள அவசர கோரிக்கை

யாழில் சமூகத் தொற்று என மக்கள் அச்சமடையத் தேவையில்லை. எனினும் பொதுமக்கள் சுகாதார நடைமுறையினை பின்பற்றுவது அவசியம் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

புங்குடுதீவில் கொரோனா தொற்றென இனங்காணப்பட்ட பெண் பயணித்த பஸ் நடத்துனருக்கும் கொரோன தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனவே இது தொடர்பில் மக்கள் சமூகத்தொற்று என குழப்பமடையத் தேவையில்லை. ஏனெனில் ஏற்கனவே புங்குடுதீவு பெண்ணிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவுடனேயே அவருடன் பயணித்த அல்லது அவருடன் பழகிய அனைவரையும் நாங்கள் சுய தனிமைப்படுத்தலுக்குள்ளாக்கியுள்ளோம். அவ்வாறு தனிமைப்படுத்தப்படுத்தலில் இருந்த ஒருவருக்கே கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் சுகாதாரப் பிரிவினரின் கண்காணிப்பில் உள்ளார்கள். எனவே பொதுமக்கள் இது தொடர்பில் அச்சமடையத் தேவையில்லை என்று வர மேலும் தெரிவித்துள்ளார்..