Photo: Duminda Silva/ facebook
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ நியமித்துள்ளார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக இருப்பார் என்று ஜனாதிபதி அலுவலகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார் என்று ‘நியூஸ்வைர்’ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்த துமிந்த சில்வாவுக்கு கடந்த மாதம் ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்திருந்தார்.