
இலங்கையில் கொவிட்-19 தடுப்பூசி திட்டத்தின் கீழ் இதுவரையில் முதலாவது தடுப்பூசி அல்லது இரண்டு தடுப்பூசிகளையும் 70 இலட்சம் பேர் பெற்றுக்கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அந்த அடிப்படையில்,தடுப்பூசி ஏற்றும் திட்டத்தின் கீழ் முதலாவது டோஸை பெற்றுக் கொண்டவர்கள் 54 இலட்சத்திற்கும் அதிகமாகும் என்று தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை சுமார் 16 இலட்சத்து 46 ஆயிரமாகும்.
‘கொவிசீல்ட்’ முதலாவது தடுப்பூசியை 9 இலட்சத்து 25 ஆயிரத்து 742 பேர் பெற்றுக் கொண்டுள்ளனர்.இதில் இரண்டாவது தடுப்பூசியை பெற்றவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 85 ஆயிரமாகும்.
‘சினோபார்ம்’ தடுப்பூசியில் முதல் டோசைப் பெற்றவர்களின் எண்ணிக்கை 42 இலட்சத்து 76 ஆயிரத்திற்கு மேற்பட்டதாகும். இதில் இரண்டாவது டோசை பெற்றவர்களின் எண்ணிககை 12 இலட்சத்து 45 ஆயிரத்து 800 ஆகும்.
‘ஸ்புட்நிக்-வி’ தடுப்பூசியின் முதலாவது டோசை 1 இலட்சத்து 57 ஆயிரத்து 368 பேர் பெற்றுள்ளனர்.இரண்டாவது டோசைப் பெற்றவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 500 ஆகும். ‘பைஸர்’ தடுப்பூசியில் முதலாவது டோசைப் பெற்றவர்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்து 793 ஆகும் என தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.