
எதிர்க்கட்சிகளின் சர்வ கட்சி ஒன்றியத்துக்கான ஆரம்ப மாநாடு இன்று (17) கொழும்பு ஜானகி ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்றது.
நீதியான சமூகத்துக்கான தேசிய இயக்கத்தினால், முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் சர்வ கட்சி மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் முற்போக்கு கூட்டணி உள்ளிட்ட மேலும் சில கட்சிகளின் பங்குபற்றலுடன் இந்த சர்வ கட்சி மாநாடு இடம்பெற்றுள்ளது.
முதல் நாள் கூட்டத்தில் நாட்டின் தற்போதைய அரசியல் நிலைவரம் மற்றும் எதிர்கால அரசியல் பயணம் என்பன தொடர்பில் கருத்துகள் பரிமாறப்பட்டுள்ளன.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன் மற்றும் திகாம்பரம் உட்பட பல கட்சித் தலைவர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.