February 22, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் மேலும் 31 கொவிட் தொற்றாளர்கள் மரணம்!

இலங்கையில் மேலும் 31 கொவிட் தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

14 பெண்களும் 17 ஆண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 3,733 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 980 பேர் இன்று (17) இனங் காணப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 83,3040 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 23,505 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 2 இலட்சத்து 55 ஆயிரத்து 833 ஆக உயர்வடைந்துள்ளது.