January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரிஷாட் பதியுதீன் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதி!

பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ரிஷாட் பதியுதீனுக்கு ஏற்பட்ட நோய் நிலமை காரணமாக அவர் சிகிச்சைக்காக தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் ஈஸ்டர் தாக்குதல் விவகாரத்துடன் தொடர்புபட்ட சந்தேகத்தில் ஏப்ரல் 24 ஆம் திகதி முதல் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.