July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

திங்கட்கிழமை முதல் பொலிஸ் அதிகாரிகளிடமிருந்து மக்களுக்கு புதிய சேவைகள்!

(Photo: Deshabandu Thennakoon/Facebook)

சமூக பொலிஸ் பிரிவு மூலம் கிராம அளவில் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் திட்டமொன்றை செயல்படுத்த பொலிஸ் தலைமையகம் திட்டமிட்டுள்ளது.

அதற்கமைய இந்தத் திட்டத்தை மேல் மாகாணத்திலிருந்து திங்கட்கிழமை முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

‘இந்த புதிய திட்டத்தின் நோக்கமானது கிராமப்புற சமூக பொலிஸ் பிரிவுகள் மூலம் நேரடியாக குற்றத் தடுப்பு பொலிஸ் கடமைகளை மேற்கொள்வதாகும்’ என மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் இந்த திட்டத்தின் கீழ், கொழும்பு நகரில் வசிக்கும் மக்களின் பல்வேறு புகார்களின் விசாரணை, அறிக்கைகள், துப்பாக்கிகள் மற்றும் ஒலிப்பதிவு உரிம விண்ணப்பங்களை அறிவித்தல், அத்துடன் பதிவு செய்யப்பட்ட குற்றவாளிகளின் மேற்பார்வை, கிராமப்புற சமூகம் போன்ற குற்றத் தடுப்பு பொலிஸ் கடமைகளை நிறைவேற்றுவது போன்ற விடயங்களை பொலிஸ் அதிகாரிகளால் செயற்படுத்தப்படவுள்ளன.

இந்தத் திட்டத்திற்கான வழிகாட்டுதல்கள் அடங்கிய கையேடுகள் நேற்றைய தினம் பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்றது.

பொலிஸ் களப்படை தலைமையகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, பொலிஸ் சேவைகள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.