முல்லைத்தீவு, கேப்பாபுலவு விமானப்படை தனிமைப்படுத்தல் மையத்திற்குள் பிரவேசிக்க மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அதன் தலைவர் ஜகத் பாலசூரி விமானப்படை தளபதியிடம் அறிக்கை ஒன்றை கோரியுள்ளார்.
குறித்த தனிமைப்படுத்தல் மையத்தில் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட இலங்கை ஆசிரியர் சங்க பொது செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட குழுவினர், முகாமில் அடிப்படை வசதிகள் இல்லை என்று குற்றம்சாட்டி 9 ஆம் திகதி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்திருந்தனர்.
கடந்த 13 ஆம் திகதி இந்த முறைப்பாடு தொடர்பில் ஆராய சென்ற மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு தனிமைப்படுத்தல் மையத்திற்கு பொறுப்பான அதிகாரிகளினால் முகாமுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பிலேயே அறிக்கை ஒன்றை கோரி மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் ஜகத் பாலசூரி, விமானப்படை தளபதி எயார் வைஸ் மார்ஷல் சுதர்சன பத்திரணவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.