இலவசக் கல்வியை இராணுவமயப்படுத்தும் முயற்சிக்கும் அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கும் எதிரான போராட்டம் தொடரும் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கட்டாய தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்தே, ஜோசப் ஸ்டாலின் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நியாயமற்ற முறையில் தாம் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக குறிப்பிட்ட அவர், தமது விடுதலையை வலியுறுத்தி போராட்டங்களை முன்னெடுத்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு- கேப்பாப்பிலவு விமானப் படை முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 16 பேரும் தனிமைப்படுத்தலில் இருந்து நேற்று விடுவிக்கப்பட்டனர்.
8 நாட்களின் பின்னர் நேற்று மாலை அவர்கள் தனிமைப்படுத்தல் மையத்தில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.