
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்தை மீளப் பெறுமாறு வலியுறுத்தியும், அரசாங்கத்தின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் மக்கள் விடுதலை முன்னணி ஆதரவாளர்கள் தலவாக்கலை நகரில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் ஜேவிபியின் அரசியல் செயற்பாட்டாளர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்றிருந்தனர்.
மக்களின் இலவச கல்வி உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்திய போராட்டக்காரர்கள், கல்வி தனியார் மற்றும் இராணுவ மயப்படுத்தப்படுவதற்கு இடமளிக்கக் கூடாது எனவும் கேட்டுக்கொண்டனர்.
அத்துடன், நாட்டில் நிலவும் உரத் தட்டுப்பாட்டால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு உரம் விநியோகிக்கப்பட வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கேட்டுக்கொண்டனர்.
அத்தியாவசியப் பொருட்கள் உட்பட ஏனைய பொருட்களின் விலையை உடன் குறைக்குமாறும் ஜேவிபி வலியுறுத்தியுள்ளது.