ஆடிப்பிறப்பு தினத்தை முன்னிட்டு வவுனியாவில் முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கம் மற்றும், நகரசபை ஆகியவற்றின் ஏற்பாட்டில் ஆடிப்பிறப்பு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
பசார் வீதியில் உள்ள நவாலியூர் சோமசுந்தர புலவரின் சிலைக்கு அருகில் குறித்த நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதன்போது விருந்தினர்களால் சோமசுந்தர புலவரின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
அத்தோடு, அவர் தொடர்பான சிறப்புரையினை ஆசிரிய ஆலோசகர் நிறைமதி நிகழ்த்தியிருந்தார்.
நிகழ்வில் நகரசபை செயலாளர், நகர சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், பொது அமைப்புகள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதேவேளை, நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிரட்டையில் ஆடிக் கூழும் கொழுக்கட்டையும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.