February 24, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

20 ஐ இழுத்தடிக்க நான் அனுமதி வழங்கமாட்டேன்: ஜனாதிபதி கோட்டாபய

அரசமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தை வைத்துக்கொண்டு என்னால் எதனையும் செய்ய முடியாது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பைக் கவனத்தில்கொண்டு கூடிய விரைவில் 20ஆவது திருத்தச் சட்ட வரைவை நிறைவேற்றிவிட வேண்டும். இந்தச் சட்ட வரைவை இழுத்தடிக்க நான் அனுமதி வழங்கமாட்டேன் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

20ஆவது திருத்தச் சட்ட வரைவு மற்றும் புதிய அரசமைப்புப் பணிகள் குறித்து ஆளுங்கட்சி உறுப்பினர்களைத் தெளிவுபடுத்துகின்ற சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தற்சமயம் அமுலில் உள்ள 19ஆவது திருத்தச் சட்டத்தால் எனது கைகள் கட்டப்பட்டுள்ளன.அதனால் 20 ஆவது திருத்தச் சட்ட வரைவை முடிந்தளவில் நிறைவேற்ற வேண்டும்.

என்னுடைய இரண்டாவது பதவியாண்டு ஆரம்பிக்கும் திகதியான எதிர்வரும் 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கு முன்னர் புதிய அரசமைப்பை சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது மேலும் தெரிவித்தார்.