January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையின் பல்வேறு பகுதிகளும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டன

இலங்கையின் நான்கு மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தேசிய கொரோனா தடுப்பு செயலணி தெரிவித்துள்ளது.

இன்று காலையில் இருந்து அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு தனிமைப்படுத்தல் தளர்த்தப்பட்டுள்ளது.

கேகாலை, இரத்தினபுரி, அம்பாறை மற்றும் கண்டி மாவட்டங்களின் பல்வேறு கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

கேகாலை மாவட்டத்தின் மாதெய்யாவ, மிஹிபிடிய கிராம சேவகர் பிரிவும், இரத்தினபுரி மாவட்டத்தின் மடுவகல வத்த மேல் பிரிவும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று, அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை 3 கிராம சேவகர் பிரிவும், கண்டி மாவட்டத்தின் கண்டி பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள பகுதிகளிலும் தனிமைப்படுத்தல் தளர்த்தப்பட்டுள்ளது.