
மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான பிரச்சினைகளில் இலங்கை அரசாங்கம் வெளிப்படைத் தன்மையுடன் செயற்படும் என்று வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்ள சிவில் செயற்பாட்டாளர்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் வெளியுறவு அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேசத்தின் முன்னிலையில் எழுந்துள்ள இனங்களுக்கு இடையிலான மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான பிரச்சினைகளை தாம் வெளிப்படைத் தன்மையுடன் கையாளவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வெளியுறவு அமைச்சில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் நீதி அமைச்சர் மொஹமட் அலி சப்ரி உட்பட சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டுள்ளனர்.